
விமானங்களில் பயணம் செய்வோருக்கு விமானகட்டணம் பல மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புகின்றனர். தொடர்ந்து ரெயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி காணப்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையை அடைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் விமானம் மூலம் சென்னை திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது விமானங்களில் பயணம் செய்வோருக்கு விமானகட்டணம் பல மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன்படி மதுரை-சென்னை வழக்கமான கட்டணம் 5 ஆயிரத்து 99 லிருந்து 32 ஆயிரத்து 508 ரூபாயாகவும், தூத்துக்குடி – சென்னை வழக்கமான கட்டணம் 5 ஆயிரத்து 354 லிருந்து 17 ஆயிரத்து 89 ரூபாயாகவும், திருச்சி – சென்னை வழக்கமான கட்டணம் 4 ஆயிரத்து 551 லிருந்து 14 ஆயிரத்து 310 ரூபாயாகவும், கோவை – சென்னை வழக்கமான கட்டணம் 4 ஆயிரத்து 634 லிருந்து 11 ஆயிரத்து 149 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.



