Salem : தலைக்கவசம் அணியாமல் சென்ற விவசாயிக்கு 3000 ரூபாய் அபராதம்..!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விவசாயி முருகனுக்கு கோவையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்தாகக் கூறி மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

வாழப்பாடி சோமம்பட்டியைச் சேர்ந்த முருகன் தனது இருசக்கர வாகனத்தின் பதிவைப் புதுப்பிக்க வாழப்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தின் பதிவைப் புதுப்பிக்க மூவாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு வர வேண்டும் என அங்குத் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசும் பொழுது தவறுதலாக வழக்குப் பதிவாகி விட்டதாகக் காவலர் தெரிவித்துள்ளார்.

தவறுதலாகப் பதிவான வழக்கை ரத்துச் செய்ய வேண்டும் எனக் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட பொழுது சரியான தகவல் இல்லை.

துறை சார்ந்த அதிகாரிகளும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனத்தின் மீது தவறாகப் பதிவான வழக்கை ரத்து செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *