உடலும் மனமும் உறுதிப்பட்டால் ஒரு பெண் எதையும் சாதிப்பாள் – வைரமுத்து.!

Advertisements

உடலும் மனமும் உறுதிப்பட்டால் ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்ற பெருமிதம் எழுகிறது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

புதிதாக ஓடிடியில் வெளியான அபெக்ஸ் படம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Apex எனும் ஒரு ஆங்கிலப் படத்தில் கதை என்னவோ சிறியது என்றாலும் படத்தின் களம் பெரியது என்று குறிப்பிட்டார். எட்டாத சிகரங்களை எட்டத்துடிக்கும் லட்சியம் கொண்ட பெண், ஒரு மலையேற்றத்தில் தன் கணவனையே இழந்தும் அவள் தனது லட்சியத்தை இழக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சிகரம் தொட முயலும் அந்த பெண் அத்துவானக் காட்டில் ஒரு மனிதன் துணைக்கு வரும் நிலையில் அவன் ஒரு ‘நரமாமிசம் தின்னி’ என்று உணர்ந்து அவனிடமிருந்து மீள்வதும் தொட நினைத்த சிகரத்தைத் தொடுவதும் மிச்சக் கதையின் உச்சம் என்றார். மேலும், உடலும் மனமும் உறுதிப்பட்டால் ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்ற பெருமிதம் எழுகிறது. இதுவொரு படமல்ல, அறியாத பூகோளம் என்று அதில் பதிவிட்டுள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *