
தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கடும்பனி மற்றும் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு கேப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிகோலிக்னி கிராமத்தில், பள்ளி பஸ் ஒன்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில், பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் மற்றும் டிரைவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 12 பள்ளி மாணவர்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



