Puppy Love: மாணவியைக் கர்ப்பமாக்கிய சிறுவன்!

Advertisements

பிளஸ்-1 மாணவியை  10-ம் வகுப்பு மாணவன் காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை ஒன்றாகப் படித்த சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கிடையே மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியின் தாய் கணவரைப் பிரிந்து சென்றார். மாணவி அவரது தந்தையுடன் வசித்து வந்தார்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வேலைக்குச் சென்றார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுவன் மாணவியின் வீட்டிற்கு வந்து தங்கினார். தனியாக இருந்த மாணவியைச் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார்.

இதுபற்றி அறிந்த மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யாரென விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். பின்னர் அவர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *