உலகம் முழுவதும் வீடுகளை விட்டு 12 கோடியே 21 லட்சம் பேர் அகதிகளாக  வெளியேறியதாக ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் வீடுகளை விட்டு 12 கோடியே 21 லட்சம் பேர் அகதிகளாக  வெளியேறியதாக  ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளாக சென்றவர்கள் என மொத்தம் 12 கோடியே 21 லட்சம் பேர்  இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தத நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி உள்ளது. அதிகபட்சமாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர்.
அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 லட்சம் பேரும்
அகதிகளாக வெளியேறியுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *