புற்றுநோய் பாதிப்பை குறைத்து ஆயுளை நீடிக்கும் மீன்!

Advertisements

மற்ற மீன்களைவிட வைட்டமின் D இதில் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் பாதித்தவர்கள் சாப்பிட்டு வந்தால் பாதிப்பைக் குறைக்கலாம்.

பால் வெள்ளி நிறத்தில், கூர்மையான முகத்தோற்றத்துடன், சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மீன் உணவாக இருக்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திட செய்யும் குமுளா மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் தான் இவை.

பால் வெள்ளி நிறத்தில் தோற்றமும், முதுகில் பச்சை நிறத்தில் சாயம் போன்ற நிறத்தில் இருக்கும்.

சிறிய வால் கொண்டு, கண்ணிற்கு அருகில் சிறிய அளவிலான் துடுப்பு கொண்டு, முக்கோண வடிவத்தில் ஊசியான தலையையும், ஒரு அங்குலம் நீளத்தில் காணப்படுவது குமுளா மீன் ஆகும்.

செதில்கள் மற்றும் மீனின் உடலுக்குள் இருக்கும் முள்கள் குறைவாக இருக்கும். மீன்களைப் பொதுவாகச் செதில்கள் பார்த்துத் தான் வாங்குவார்கள்.

ஆனால் இந்த மீனின் உடலைப் பார்த்து வாங்கலாம், கெட்டுப்போன பழைய மீன் என்றால் உடலில் வரி வரியாக இருக்கும். சுவையுடைய மீன் என்பதால் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரைய விற்பனை செய்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கிறது. ஒமேகா – 3 ஊட்டச்சத்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதையும் தடுப்பதால் மன அழுத்தம், மன சோர்வு போன்றவை நீங்குகிறது.

கார்போஹைட்ரேடின்றி புரதச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

மற்ற மீன்களைவிட வைட்டமின் D இதில் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் பாதித்தவர்கள் சாப்பிட்டு வந்தால் பாதிப்பைக் குறைக்கலாம். வைட்டமின் பி5, பி6 போன்ற ஊட்டத்துகளும் உள்ளன.

இதனால் வயது முதிர்வால் ஏற்படும் மூட்டுவலி போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. குமுளா மீன் பொரியல் மற்றும் குழம்பிற்கு நன்றாக இருக்கும். குழம்பினை விடப் பொரியலுக்கு சுவை கூடுதலாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *