Advertisements

பிரபல தமிழ் நடிகை திரிஷாவையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயையும் ஒப்பிட்டு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாகதமிழக அரசியலில் ஒரு தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சனம் செய்வது அநாகரிகமாக கருதப்படுகிறது அந்த வகையில் யாரையும் புண்படுத்தும்படியாக அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவதில்லை. இந்த நிலையில் நடிகை திரிஷாவையும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயையும் இணைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பேசிய பேச்சு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திரிஷா சென்னையை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தற்பொழுது இவருக்கு 43 வயதாகிறது இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் .நடிகர் விஜயுடன் இணைந்து இவர் நடித்த கில்லி படம் மிகப்பெரிய வெற்றி படமாகும் அதேபோல் விஜயுடன் நடித்த குருவி படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து விஜயுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர் திரிஷா. தமிழக அரசால் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய போது நடிகை திரிஷாவும் அந்த கட்சியில் இணைவார் அவருக்கு பதவிகள் தரப்படும் என்றெல்லாம் பேசப்பட்டன .ஆனால் திரிஷா இது பற்றி எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை நடிகர் விஜய்யும் இது குறித்து எதுவும் பேசவில்லை
இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற மக்கள் சிந்திக்க கூட்டத்தில் நடிகர் விஜய் காரசாரமாக பேசினார் அவர் திமுக அதிமுக பாஜக ஆகிய மூன்று கட்சிகளையும் சவாலுக்கு அழைத்தார் . இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்
அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் எதிர்பாராத அளவில் திடீரென நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசினார்
விஜயின் சவால் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நைனார் நாகேந்திரன் பதிலளிக்கும் போது பாவம் அவர் அனுபவம் இல்லாதவர் முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக திரிஷாவிடம் சிக்கி இருக்கும் அவர் வெளியே வந்தால் தான் ஏதாவது உருப்படியாக நடக்கும் என்று பதில் அளித்தார். நடிகை திரிஷாவை அவர் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருப்பதாக தமிழக வெற்றி கழகத்தினர் கருதுகிறார்கள் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு அரசியல் நாகரிகம் இல்லாதது
நைனார் நாகேந்திரன் உடனடியாக தனது பேச்சை வாபஸ் வாங்க வேண்டும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் போர்க்கொடி பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



