ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் – டிரம்ப் எச்சரிக்கை..!

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓமனில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குச் சென்று அதிபர் டிரம்பை சந்தித்தார்.

இந்நிலையில், ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லையென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்றும், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம் என்று விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *