Instagram: வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டிய நயன்தாரா!

Advertisements

சமூக வலைதளங்கிலிருந்து விலகியே இருந்த நடிகை நயன்தாரா, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துள்ளதோடு மட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார்.

இதுவரை தென்னிந்திய திரையுலகில் கலக்கி வந்த நயன்தாரா, அடுத்ததாகப் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் இந்தியில் முதன்முதலில் நடித்த ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. ஜவான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் புரமோஷன் பணிகள் பிசியாக நடைபெற்று வருகிறது. நேற்று கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர அப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். நோப்புரமோஷன் பாலிசியை கடைபிடித்து வருவதால் நயன், இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

நயன்தாரா ஜவான் விழாவில் கலந்துகொள்ளாததால் ஏமாற்றம் அடைந்த அவரது ரசிகர்களைக் குஷிபடுத்தும் வகையில் ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார் நயன். இதுவரை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லாமல் இருந்த நயன்தாரா, தற்போது முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கு ஒன்றை தொடங்கி எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் அவர் பதிவிட்ட முதல் வீடியோவே வேறலெவலில் வைரலாகி வருகின்றன.

இதுவரை தனது மகன்களின் முகத்தைக் காட்டாமல் மறைத்து வந்த நயன், அந்த வீடியோவில் தன் மகன்களுடன் ஹூகூம் பாடலை ஒலிக்கவிட்டு மாஸாக நடந்து வருகிறார். நயனின் இந்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் அவரை முதல் ஆளாகப் பாலோ பண்ணியது அவரின் கணவர் விக்னேஷ் சிவன் தான். அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்துக்கு மேல் பாலோவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *