Advertisements
தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். சனிக்கிழமை இரவு தொடங்கி இன்று காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தது, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.