துருக்கியில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து!

துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 12 தளங்களைக் கொண்ட அந்த ஓட்டல் முழுவதும் தீப்பரவிக் கொளுந்துவிட்டு எரிந்தது.

தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்தது.

அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *