
குன்றத்தூரில் விமான பணி பெண்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நான்காவது தளத்தில் வட மாநிலத்தை சேர்ந்த குஷ்பூ என்ற பெண் உட்பட இரண்டு பெண்கள் இந்த வீட்டில் தங்கி விமான பணி பெண்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடந்தனர். இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்துசம்பவ இடதுக்குவந்த பூந்தமல்லி மற்றும் மதுரவாயலில் தீயணைப்பு விரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்.

இதில் வீட்டிலிருந்த பொருட்கால் தீயில் எரிந்து கருகின. இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணையில் வீட்டில் இருந்த ஏசியில் மின்சார சுவிட்சை ஆப் செய்யாமல் சென்றதால் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. ஏராளமான குடியிருப்புகள் கொண்ட வீட்டில் விமான பனி பெண்கள் தங்கி இருந்த வீட்டில் உரிய நேரத்தில் தீ அனைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



