
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பொம்மை முதலமைச்சர் என கேலி செய்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகளுக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , நடத்தப்பட்டு வரும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார்.
பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்தான் குற்றங்களை செய்தவர்களா எனவும் வினவியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே அக்னிப் பரீட்சையாக திமுக அரசு மாற்றி விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.
சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பொம்மை முதலமைச்சர் என கேலி செய்துள்ளார்.




