பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி பேதி..!

Advertisements
திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள பிலால் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டு பாதிப்படைந்திருந்தனர். புகாரியின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சோதனை செய்ய வந்தனர். ஆனால் கடை உரிமையாளர்கள் இல்லாததன் காரணமாக தற்காலிகமாக கடையை பூட்டு போட்டு சென்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் பேசியதில், திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடைக்கு தற்காலிகமாக பூட்டு போட்டு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
திருவல்லிக்கேணி சாலையில் உள்ள பிலால் பிரியாணி கடையில் சாப்பிட்ட 20 நபர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கடையில் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளார்கள் உணவு வாங்கி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மக்களிடமிருந்து எங்களுக்கு நேராக புகார் வந்த நிலையில், புகார் அடிப்படையில் சோதனை செய்ய வந்தோம் என்றும் கூறினார். மதியம் ஒரு 1மணி அளவில் இந்த கடையை திறப்பார்கள் கடைகள் முழுவதும் மூடப்பட்டிருக்கிறது அவர்களது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது
திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர்கள் உதவியுடன் இந்த கடையை பூட்டால் பூட்டினோம் இந்த கடைகளில் உள்ள பொருட்களை எடுக்கும் பொழுது எங்களிடம் சொல்லி தான் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மக்களின் நலனை கருதி தற்காலிகமாக பிலால் பிரியாணி கடையை பூட்டி வைத்திருக்கும். கடை உரிமையாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேட இருக்கிறோம் காவல்துறையிடம் ஒரு கடிதத்தை கொடுக்க உள்ளோம் பூட்டை உடைத்து இங்கு இருக்கக்கூடிய பொருட்களை எடுத்து சொல்லக்கூடாது என்று அவர்களிடம் விளக்கம் கேட்கும் வரை இந்த கடையை திறக்க விடமாட்டோம் என்றார். மவுண்ட் ரோடில் உள்ள பிலால் கடையில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத குறித்து எங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் புகார் ஏதேனும் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார். சிறிய கடை பெரிய கடை என்றெல்லாம் பார்த்து சோதனை செய்ய மாட்டோம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *