உலகக்கோப்பை கால்பந்து – அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகள் மோதின.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், பிரான்ஸ் அணி அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், சுவீடன் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *