
கோவையில் மறைந்த கவிஞர் புவியரசுவின் உடலுக்கு தமிழக காவல்துறை அரசு சார்பில் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளத்ததில் பதிவிட்டுள்ளார். அதில், சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு என்று புகாரம் சூட்டியுள்ளார்.
‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கவிஞர் புவியரசுவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று கூறியுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலக்கியத் துறையில் புவியரசுவின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதன் படி, கோவையில் உள்ள அவரது உடலுக்கு தமிழக காவல்துறை அரசு சார்பில் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.



