ஒட்டன்சத்திரத்தில் போராட்டத்திற்கு திரண்ட விவசாயிகள்!
விருதுநகர் மாவட்டம் முதல் கோயமுத்தூர் வரையிலான 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் தும்பிச்சிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மின்கோபுரங்களுக்கு இடையே மின்சார கம்பி பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மின்கோபுரம் மற்றும் மின்கம்பிகள் செல்லும் விவசாய நிலங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இழப்பீடு வழங்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு முழு இழப்பீட்டை யும் வழங்கிய பின்னரே திட்டப்பணிகளை தொடரக் கோரி ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டி ருந்தது.
இதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன்முருகசாமி, மாநில பொதுச்செயலாளர்கள் நேதாஜி, முத்துவிஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், கோவை மாவட்ட செயலாளர் மந்திராச்சலம், திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் ஒட்டன்சத்திரம் வட்டா ச்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இதனையடுத்து ஒட்ட ன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, போலீஸ் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி கள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதானல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.