விமான கடத்தல் முயற்சியில் இருந்து பயணிகளை காப்பாற்றிய கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் என்ற பிளை துபாய் பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையில் விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இஸ்ரேல் நாட்டிற்கு அவசரகால சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. தொடர்ந்து ஸ்குவாக் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் விமானம் வழக்கத்திற்கு மாறாக 15 ஆயிரம் அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது, விமான கடத்தல் என்ற எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இஸ்ரேலிய வான்வெளியும் சிறிது நேரத்தில் மூடப்பட்டது. இதன்காரணமாக விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விமான கடத்தல் சம்பவத்தில் ஓமன் நாட்டு துணை விமானியுடன், இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிள்ளார். அப்போது அவர் பயணிகளின் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் விமானியுடன் போராடிய போது, இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையிலும் சவுதியில், விமானத்தைப் பத்திரமாக தரையிரக்கினார். இதையடுத்து சவுதியில் ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடமிருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


