Israel Hamas War Updates: பலி 11 எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Advertisements

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனர்கள் பலி 11 ஆயிரத்தை கடந்தது!

ஜெருசலேம்: 35 நாட்களாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 35வது நாளாக உக்கிரமடைந்துள்ள நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்-ரான்டிசி மருத்துவமனை, அல்-நாஸர் மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை மற்றும் மனநல மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளையும் இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துள்ளது. அதனால் மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் மருத்துவமனைகளுக்குள் சிக்கியிருயிருக்கின்றனர்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *