Crime: சிறுமியைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய கொடூரம்!

Advertisements

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்துள்ளது.

சிறுமியின் வீடு அருகே சாக்கடையில் சாக்கு மூட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையை சேர்ந்த சிறுமி ஆர்த்தி 4 நாட்களுக்கு முன்பு மாயமானார். சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், ஓட்டுனரான இவரது மகள் ஆர்த்தி ஒன்பது வயதான இவர் அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஆர்த்தி திடீரெனக் காணாமல் போனார்.மேலும் வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த பெற்றோர்கள் மகள் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடும் பணியைத் துவக்கினர் ஆனால் சோலை நகர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர் அதில் ஒன்றில் கூடச் சிறுமி செல்லும் வீடியோ பதிவுகள் இல்லை.

மேலும் சிறுமி விளையாடிய இடத்தின் அருகில் உள்ள அனைத்து வீடுகள், பாதாள சாக்கடைகள், என அனைத்து இடங்களிலும் போலீஸ் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.மேலும் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்காத முத்தியால்பேட்டை போலீசாரை கண்டித்து அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிறுமி மாயமானது தொடர்பாக எந்தவித தகவலும் தெரியாமல் தேடப்பட்ட போலீசார் திணறிவந்தனர்.

இந்த நிலையில்  காணாமல் போன சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்துள்ளது. சிறுமியின் வீடு அருகே சாக்கடையில் சாக்கு மூட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *