சென்னை இனி தளபதியின் கோட்டை..!

Advertisements
வருகின்ற தேர்தலில் சென்னை தவெகவின் கோட்டையாக மாறும் என்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில். பொதுச் செயலாளர் ஆனந்த்,நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் ஆனந்த் பேசியபோது, வில்லிவாக்கத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கையில் 19 ஆயிரத்து 417 பேர் இருப்பதாகத் தெரிவித்தார். சென்னையில் உள்ள 16 தொகுதியும் திமுகவின் கோட்டையாக உள்ளது என்றும் வருகின்ற தேர்தலில் சென்னை தளபதியின் கோட்டையாக மாறும் என்றும் தெரிவித்தார்.நிர்வாகிகள் ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, கூட்டத்தில் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேசியபோது, 40 நாற்பது சதவீகித மக்கள் தவெகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்று கூறினார். தவெக வுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு உண்டு என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *