
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திமுகவினர் வேண்டுமென்று சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன்குற்றம் சாட்டி பேசினார்.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒலகடம் பகுதியில் மறைந்த எம்ஜிஆர் 107 வது பிறந்த நாளை ஒட்டி எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே சி கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன்.,எப்படியாவது மின்சாரத்தை துண்டித்தால் அதிமுக பொதுக்கூட்டம் நின்றுவிடும் என நினைத்து மின்சாரத்தை துண்டிக்கிறார்கள்., அதை போல் தற்போது திமுக ஆட்சியில் மதுபான பாட்டில்கள் குவாட்டருக்கு ஐந்து முறை விலை உயர்த்தி உள்ளார்கள்.,
தமிழக முழுவதும் விற்பனை செய்யக்கூடிய அனைத்து மதுபான பாட்டில்களில் தொகையும் செந்தில் பாலாஜி மற்றும் ஸ்டாலினின் குடும்பத்திற்கு மட்டுமே செல்கின்றன..
ஸ்டாலினின் பினாமி ஜெயச்சந்திரன் என்பவரின் பெயரில் இருந்து நேரடியாக வரி கட்டாமல் கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து 50 சதவிகிதம் பணத்தை ஸ்டாலினின் குடும்பம் எடுக்கிறார்கள்…
நாள் ஒன்றுக்கு 500 முதல் 1000 கோடி வரை பணத்தை செந்தில் பாலாஜி மற்றும் மு க ஸ்டாலின் அவர்கள் மதுபானம் மற்றும் நிலக்கரி உள்ளிட்டவற்றிடிலிருந்து கொள்ளையடித்து வருகிறார்கள்.,
நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் தன்னுடைய நெருங்கிய நண்பரிடத்திலே ஸ்டாலின் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்..
தொடர்ந்து பால் விலையை உயர்த்தி உள்ளார்கள் ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கொள்முதல் விலையினை உயர்த்தவில்லை.,
மின் கட்டணம் அதிமுக ஆட்சி வீடுகள் தோறும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது., இதனால் தமிழ்நாட்டில் முப்பது சதவீதம் குடும்பத்தினர்கள் மின் கட்டணமே கட்டாமல் இருந்து வந்தார்கள்., ஆனால் திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் சாதாரண கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்கள் கூட 300 முதல் 800 ரூபாய் வரை கட்டணம் கட்டும் நிலைக்குச் தள்ளப்பட்டுள்ளார்கள்…
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் 20 லட்சம் பேரை திரட்டுவேன் என உதயநிதி அவர்கள் தெரிவித்து இருந்தார்கள் ஆனால் இரண்டு லட்சம் பேரை வைத்து மட்டுமே மாநாடு நடத்தினார்கள்.. அதிலும் ஒருவரும் சீட்டாட்டம் ஒருபுறம் இளைஞர்களுக்கு புல்லட் பைக் வாங்கி கொடுத்து தமிழகம் முழுவதும் ஊர்வலமாக வர வைத்தார்கள்., மாநாட்டு அன்று பிரைவேட் பஸ் உள்பட அனைத்து பேருந்து சேலம் நோக்கிதான் சென்றது ஆனால் 20 பேர் 10 பேர் மட்டுமே சென்றார்கள்..
15 சிறுவர்களை பேருந்தில் அழைத்துக் கொண்டு கோவையிலிருந்து சேலத்திற்கு சென்றார்கள்., என்று பேசினார்..



