Lal Salaam Audio Launch: காக்கா கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி!

Advertisements

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், காக்கா கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் நிறைய விஷயங்கள் பற்றி பேசிய ரஜினி, தான் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் சொன்ன காக்கா கழுகு கதை சர்ச்சையானதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, அது விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து விரிவாக அவர் பேசியதாவது : “காக்கா கழுகு கதை வேறமாதிரி போயிடுச்சு. அது நான் விஜய்யை சொன்ன மாதிரி சோசியல் மீடியாவில் பேசினார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படம் அவர் வீட்ல ஷூட்டிங் பண்ணும்போது விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். ஷூட்டிங் முடிஞ்சதும் சந்திரசேகர் விஜய்யை அறிமுகப்படுத்தினார். அவனுக்கு நடிப்புல ஆர்வம் இருக்கு, அவனை படிச்சுட்டு நடிக்க சொல்லுங்கனு என்கிட்ட சொன்னாரு. நானும் விஜய்யிடம் நல்லா படினு அட்வைஸ் பண்ணுனேன். அதுக்கப்புறம் விஜய்யும் நல்ல நடிகராகி படிப்படியாக தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

அடுத்ததா அரசியல் மற்றும் சமூக சேவையிலும் போக இருக்கிறார். இப்படி இருக்கும்போது எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்லுவதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது. விஜய்யே சொல்லிருக்காரு எனக்கு போட்டி நான் தான்னு, என்னுடைய படத்துக்கு நான் தான் போட்டின்னு நானும் சொல்லிருக்கேன். விஜய் எனக்கு போட்டினு நினைச்சாலோ, இல்ல எனக்கு போட்டினு விஜய் நினைச்சாலோ அது எங்க ரெண்டு பேருக்குமே மரியாதையா இருக்காது.

தயவு செஞ்சு ரெண்டு பேரோட ரசிகர்களும் சண்டை போடாதீங்க. இந்த காக்கா கழுகுனு ஒப்பிட வேண்டும். இது என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோள்” என பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *