Dharmapuri Thaipusam Chariot Festival: பெண்கள் மற்றும் பங்கேற்ற தேர் திருவிழா!

தருமபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் தைப்பூசத் திருவிழா கடந்த 21ம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடைபெற்றுவந்தது. அதன் ஒருபகுதியாக தைப் பூசத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பெண்பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்ற(27-1-24) நடைபெற்றது. விவசுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம்பிடித்துஇழுத்து நிலையில் அப்போது பக்தர்கள் முருகா என கோஷங்கள் விண்னை முட்டின பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு தேர்மீது வீசி வழிபட்டனர்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணியசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார். தமிழகத்திலேயே தருமபுரியில் பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும். தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *