Lok Sabha Elections 2024: நாளைத் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்!

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. லோக்சபா தேர்தலையொட்டி, மத்தியில் பாஜக, இந்தியா கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என 3 கட்சிகளும் தங்கள் தலைமையில் தனித்தனி கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இதில், திமுக கடந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகளுடன் சேர்ந்தே இந்த முறையும் தேர்தலைச் சந்திக்கிறது. அதன்படி தொகுதி பங்கீட்டில் திமுக வேகம் காட்டியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதியை ஒதுக்கியது.

அதற்கு அடுத்ததாக, சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் க்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேகவிற்கு நாமக்கல் தொகுதியெனத் தொகுதி பங்கீட்டில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்தது. இன்று மக்கள் நீதி மய்யத்திற்கு லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யாத திமுக, ராஜ்யசபா தொகுதி ஒன்றை மட்டும் ஒதுக்கியது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தான் இன்னும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடும் உறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. அதன்படி, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்று எனக் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளைத் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரசு கட்சிதலைவர் செல்வப்பெருத்தகை தெரிவித்துள்ளார்.மேலும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி இல்லை என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளதாகத் தெரிவித்தார். நாளைத் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரசு கட்சிதலைவர் செல்வப்பெருத்தகை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *