தமிழக கவர்னர் 2 நாள் டெல்லி பயணம்!
சென்னை, தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலைச் சென்னையிலிருந்து விமானம்மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா, அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்புவாரெனக் கூறப்படுகிறது.

