Actor Surya Latest: நடிகர் சூர்யா மருத்துவமனையில் அனுமதி!

Advertisements

Actor Surya: நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சூர்யா சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சிவா, ‘அண்ணாத்த’ படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகினறனர்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படம்,  3டி டெக்னாலஜியுடன்  மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் சுமார், 350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த நடித்தார் சூர்யா விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து விழுந்து, ஏற்பட்ட விபத்தில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரைப் படக்குழுவினர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். இந்த விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *