தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது – பிரதமர் பேச்சு.!

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு  முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்  சாதனையும்  மண்டலப் பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *