
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர் ஐயன் துறை. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெடிக்கல் ரெபர்ஸன்டேட்டிவ் ஆகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு அடிமையாகிய ஐயன் துறை தற்காலிகமாகக் கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று அதில் வரும் வருமானத்தை வைத்துத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு மாலை ஜம்பை பகுதியில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றில் மது வாங்கிக் கொண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜம்பை பகுதியில் பவானி ஆற்றில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஐயன் துறையின் நண்பர்களான கார்த்திக் முருகன் உட்பட போற்ற இருவருடன் சேர்ந்து ஐந்து பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாய் தகறாரு முற்றி ஐந்து பேருக்கும் இடையே கைகளை ஏற்பட்டு உள்ளது. இதில் ஐயன் துறையின் தலைமீது நண்பர்கள் கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு உடலை ஆற்றங்கரையில் ஆகாயத்தாமரைக்கு அடியைப் புதைத்து வைத்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.இந்த நிலையில் மூன்று நாட்கள் ஆகியும் ஐயன் துறை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து இன்று காலைப் பவானி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அக்கம் பக்கம் விசாரித்தும் உள்ளனர்., இதற்கிடையே ஐயன் துறை மதா இருந்த சென்றபோது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகி உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., இந்த நிலையில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய ஐயன் துறை நண்பர்களான ஜம்பை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் முருகன் உட்பட நான்கு பேரைப் பிடித்துப் பவானி போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் உடலைப் பிரேத பரிசோதனைக்காகப் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உறவினர்கள் பிடித்து ஒப்படைத்த ஐயன் துறையின் நண்பர்கள் ஆன கொலை குற்றவாளிகள் கார்த்திக் முருகன் உள்பட நான்கு பேரையும் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பவானி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு கொலைக்கான நியாயம் கிடைக்க வேண்டும் எனச் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகக் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


