ஈரானுடன் புதிய ஒப்பந்தத்திற்குத் தயாராகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

இரண்டாம் உலகப்போருக்குப் பின் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, உச்சக்கட்ட இராணுவ வலிமை மற்றும் அதிகாரத்துடன் அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், ஈரான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஒரு ஒப்பந்தத்திற்கான எல்லைக்கோடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதால், எந்தவொரு தாக்குதலையும் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்துமாறு ஈரானாலும் பிற மத்தியக் கிழக்கு நாடுகளாலும் அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில், ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும், முழுமையாகவும், ஒட்டுமொத்தமாகவும் திறப்பதும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலனுக்காகவும், அதேபோல் வெற்றிகரமான மற்றும் வளமான ஈரானின் வாழ்வாதாரத்திற்காகவும், விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, இந்தத் தாக்குதலை ரத்து செய்யத் தான் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அமைதி முயற்சிக்கு இஸ்ரேல் நாடும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *