David Warner: டேவிட் வார்னர் ஓய்வு அறிவிப்பு!

Advertisements

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ஏற்கனவே விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு நாள் போட்டியிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது-கை தொடக்க மட்டையாளரான இவர் 132 ஆண்டுகளில் முதல் தரத் துடுப்பாட்ட அனுபவம் எதுவும் இன்றி ஆஸ்லியத் தேசிய அணிக்கு நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது வீரர் ஆவார். 2015 முதல் 2018 வரை தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் துணைஅணித் தலைவராக இருந்தார்.

துவக்கத்தில் ஸ்லிப்பில் களத்தடுப்பாடினார். பின் 2016 ஆம் ஆண்டில் கைவிரலில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் மத்திய திசையில் களத்தடுப்பாடி வருகிறார். ஜனவரி 23, 2017 இல் ஆலன் பார்டர் பதக்கத்தை வென்றார். இந்தப் பதக்கத்தை வென்ற நான்காவது வீரர் ஆவார். மேலும் தொடர்ச்சியாக இந்தப் பதக்கத்தை ஒரு முறைக்கு மேல் பெற்றவர் எனும் சாதனை படைத்தார்.

ஏப்ரல், 2017 அன்றைய நிலவரப்படி, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையின் படி தேர்வுத் துடுப்பாட்டத்தில் 6 ஆவது இடத்திலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்யில் 3 ஆவது இடத்திலும் உள்ளார். பன்னாட்டு இருபது போட்டிகளில் 1500 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆஸ்திரேலிய மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.  இவர் பங்கேற்ற 100 வது போட்டியில் 100 ஓட்டங்கள் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் 8 வது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

ஆனால் சமீப காலமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிட்னியில் 3-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாகும்.

தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீரரான வார்னர் சிறப்பாக விளையாடினார்.

வார்னர் இரண்டு முறை உலக கோப்பையை வாங்கிய அணியில் இடம பிடித்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 45.30 ஆகும். ஸ்டிரைக் ரேட் 97.26. ஒரு நாள் போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 22 சதங்கள், 33 அரை சதங்கள் அடித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *