Advertisements

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதிமுகவும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது, முஸ்லிம் கட்சிகளும் தங்களுக்கு அதிகப்படியான தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் திமுக கூட்டணியில் தற்பொழுது 41 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன இதேபோல் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. வைகோபால்சாமி தலைமையிலான அதிமுகவும் இதே போன்ற கோரிக்கையை வைத்திருக்கிறது.
தற்பொழுது முஸ்லிம் மதசார்பான காட்சிகளும் தங்களுக்கு கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கின்றன . கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அதேசமயம் முஸ்லிம் லீக் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது . மனிதநேய மக்கள் கட்சி மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் , வருகிற சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ மற்றும் தம்மி முன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியாகவே திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே , கடந்த தேர்தலில் இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளை இப்போது நான்கு கட்சிகளுக்கும் பரிந்து அளிக்க திமுக முடிவு செய்திருக்கிறது .
அதன்படி முஸ்லிம்களை கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிகிறது . இது பற்றி தகவல் தெரிந்த முஸ்லிம் லீக் கட்சியினர் கடுமையான அதிருப்தியில் ஆண்டு உள்ளனர் . மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்த வரையில் அதன் தலைவர் ஜவஹர் இல்லா ஐந்து தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என கேட்கிறார் . முஸ்லிம் லீக் தரப்பில் தமிழகத்தில் முஸ்லிம்கள் 10 சதவீதம் இருக்கிறார்கள் அதன்படி 24 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்கிறது .
மற்றும் முஸ்லிம் கட்சிகளும் தங்களுக்கு மூன்று முதல் ஐந்து தொகுதிகள் வரை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன . வருகிற சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் தனிப்பட்ட மெஜாரிட்டியுடன் திமுக வெற்றி பெற வேண்டும் என்பது மு க ஸ்டாலின் திட்டமாக இருக்கிறது. அந்த வகையில் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மீதமுள்ள தொகுதிகளை எதிர்க்கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் வகையில் முஸ்லிம்கள் கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கி தருவதற்கான வாய்ப்புகள் இல்லை .
எனவே இது தொடர்பான தொகுதி பங்கீடுகள் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன . இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இருக்கிறது. எனவே முஸ்லிம் கட்சிகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் அவர்கள் கேட்கும் தொகுதியை ஒதுக்கித் தர முடியாத சூழ்நிலையிலும் இருக்கிறது.
எனவே இது தொடர்பாக மு.க ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
Advertisements



