Israel Hamas War Updates: 3-வது நாளாக நீடித்து வரும் போரால் பதற்றம்!

Advertisements

3-வது  நாளாக நீடித்து வரும் போரால் பதற்றம்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயானபோர் இன்றும் 3ம் நாளாக நீடித்து வருகிறது, இதில்  பலி எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. கடந்த 7ம் தேதி காலைக் காசா முனையிலிருந்து இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தரைவழி, வான்வழி, கடல் வழியாக ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். ஆபரேஷன் அல் அக்சா வெள்ளம் என்ற பெயரில் பெயரில் காசா முனை அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள நகங்களுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்குக் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.


இந்தக் கொடூர தாக்குதலைப் பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்துள்ளனர். இஸ்ரேலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய ராணுவ தளத்தையும் கைப்பற்றினர். இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், குழந்தைகள், பெண்கள் எனப் பலரையும் பிணை கைதிகளாகச் சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைகைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்குக் கொண்டு சென்றனர். வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேலியர்களை கொடூரமாகக் கொலை செய்யும் வீடியோக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சமூகவலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. மேலும், இளம்பெண்ணைக் கொலை செய்து அவரது உடலை நிர்வாணமாகக் காரில் கொண்டு செல்லும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 413 பேர் உயிரிழந்தனர்.ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காசாவுக்கான மின்சாரம், எரிபொருள், பிறபொருட்கள் வினியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. மேலும், காசா முனைமீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 3ம் நாளாக நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாகக் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 413 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலி எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்றும் 3ம் நாளாக நீடித்து வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *