Private jet: வைத்திருக்கும் எலைட் நடிகை!

Advertisements

முதன்முதலில் சொந்தமாக ஜெட் விமானம் !

தென்னிந்திய சினிமாவில் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இணைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார். தனது நடிப்புத்திறமைக்காகச் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது எனப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

நயன்தாராவும் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் பிரைவேட் ஜெட் விமானத்தைத் தனிப்பட்ட பயணங்களுக்கும், தொழில்சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் தனியார் ஜெட் விமானத்தின் உட்புறத்தின் சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் கவர்ந்து வருகிறது.

‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம்பதித்துள்ள நயன்தாரா இந்த நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய். ஒரு தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம்பதித்துள்ள நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தித் திரையுலகைப் பொறுத்தவரை, ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதுரி தீட்சித் போன்ற நடிகைகள் தனியார் ஜெட் விமானத்தைச் சொந்தமாக வைத்துள்ளனர். நயன்தாராவின் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.50 கோடியெனக் கூறப்படுகிறது.

மேலும் நயன்தாராவிடம் விலை ஆடம்பர கார்களும் உள்ளன. குறிப்பாக ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *