Bangalore Bandh: 144 தடை உத்தரவு!

Advertisements

144 தடை உத்தரவு! பேருந்து போக்குவரத்துக்கு தடை!

நாளைக் கர்நாடகாவில் ‘பந்த்’ நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லைவரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூருவில் நேற்று முன் தினம் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கா்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெறும் இந்தப் போராட்டம் தீவிரமானதாக இருக்கும் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் பெங்களூருவில் இன்று இரவு முதல் நாளை இரவுவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முழு அடைப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதனிடையே, நாளைக் கர்நாடகாவில் ‘பந்த்’ நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லைவரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் இரு மாநில எல்லை பகுதியில் சூழ்நிலையைப் பொறுத்து பேருந்துச் சேவை தொடரும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *