சேற்றில் சிக்கிய யானை:பல மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு..!

ஆந்திரா-தமிழக எல்லையோரம் உள்ள ஏரியில் சேற்றில் சிக்கிய பெண்  யானையை ஆந்திரா மற்றும் குடியாத்தம் வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி டிபி பாளையம் அருகாமையில் கந்தன் சரு என்ற இடத்தில் ஏரி ஒன்று ஆந்திரா மற்றும் தமிழக எல்லையோரம் அமைந்துள்ளது.தொடர் மழையின் காரணமாக காப்பு காட்டை  சுற்றி உள்ள ஏரி மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால்,காப்புக்காட்டில் தண்ணீர் குடிக்க வந்த யானை ஒன்று  ஏரியில் இறங்கிய போது சேரில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த யானை ஏரியில் இருந்து எழ முடியாமல் சுமார் 5 மணி நேரம் போராடிக் கொண்டிருக்கிறது.அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இந்த ஏரி ஆந்திரா மற்றும் தமிழக எல்லையோரம் அமைந்துள்ளதால் ஆந்திரா வனத்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  சேற்றில் சிக்கி உள்ள யானையை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆந்திரா வனத்துறை மற்றும் குடியாத்தம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *