
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என இந்து திராவிட மக்கள் கட்சியின் தேசிய தலைவர் ரமேஷ்பாபுஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த குரோம்பேட்டை இந்து திராவிட மக்கள் கட்சியின் மாநில பொதுகுழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய தலைவரும், நிறுவனருமான மருத்துவர் ரமேஷ்பாபுஜி தலைமை வகித்தார். பின்னர் மருத்துவர் ரமேஷ்பாபுஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் வேட்பாளரை நிறுத்துவதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது என்றும் முதல் கட்டமாக 10 வேட்பாளரை அறிவிக்கபட்டதாகத் தெரிவித்தார். இதை தொடர்ந்து, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது மத்திய அரசு போலி வாக்காளர்களையும், இறந்தவர்களை தமிழகத்தில் கண்டுபிடிக்கவும், சரியான ஒருநிலைபாடு எடுத்துள்ளது என்றார். உயர்கல்வியில் உள்ள ஆசிரியர்கள் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிபவர்களை நிரந்தர பணி நியமணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். திராவிட கழகத்தினர் பிரதமரை கொள்வேன் என்றும் ஆளுநர் ரவி அவர்களை பயங்கரவாதி என சொல்வதை நிறுத்த வேண்டும் என எச்சரித்து அறிவுறுத்தினார்.


