முக்கியமான திட்டங்களுக்கு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடுவது ஏன்?

Advertisements

நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது ஏன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிரம்பியுள்ள கேள்விகளில் சிலவற்றைத் தான் கேட்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாசிங் மெசினில் வெளுப்பது எப்படி? என்று வினவியுள்ளார்.
இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்? என்றும், கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்? என்றும் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *