Advertisements

கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறி, நகர மற்றும் கிராம பகுதியில் புகுந்து வருகிறது. தொடர்ந்து விளை நிலங்களில் உள்ள விளை பொருட்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் தேவிகுளம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த தெருநாயைத் துரத்தியது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்தச் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.
Advertisements


