Sabarimala: தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!

Advertisements

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில்,  தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது.  மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து சாமி தரிசனம் செய்யத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.  சன்னிதானம் நடைப்பந்தல்,  பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்குப் பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.  தினமும் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதுவரை 1,61,789 பேர் தரிசனம் செய்துள்ளதாகத் தேவசம் போர்டு அறிவித்தது.  இந்நிலையில் வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்கச் சாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டதிலிருந்து மதியம் 1 மணி வரையிலும்,  பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *