
இஸ்ரேலுடனான போருக்குப் பின் ஈரானிய உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற போர், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பின் ஒருவாறு முடிவுக்கு வந்தது.
ஈரான் மீது போர்தொடுத்தால் அதன் எதிர்விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஈரானிய உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் போருக்குப் பின் முதன்முறையாக அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காட்சியில் சியா இனத்தவரின் ஆசுரா நிகழ்வையொட்டி ஒரு மசூதியில் வழிபாடு நடத்தியவர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
