தேர்தலில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறி சுப்ரமணியம் பேட்டி..!

Advertisements

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று கூறி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அமைச்சர் மா. சுப்ரமணியம் பேட்டியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 3 நாட்களாக 4 ஆவது சர்வதேச பொது சுகாதார மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, பொது சுகாதாரத்துறை உலக அளவில் சிறந்து விளங்குகிறது. மேலும், தேர்தல் வாக்குறுதி தாண்டி சொல்லாததையும் செய்து வருகிறோம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர், அரசியலுக்காக யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் திட்டங்களை தெரிந்து கொண்டு பேசுவது நல்லது என கூறினார்.

இந்த நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி, மலையரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *