
உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் கல்வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களில் 73 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளர்.
வட மாநிலங்களில் ஒருசில இடங்களில் ஐ லவ் முகமது என்று முழக்கமிடுவதும் சுவரொட்டிகளை ஒட்டுவதுமாக உள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் செப்டம்பர் 26ஆம் நாள் ஒரு கூட்டத்தினர் முழக்கமிட்டதுடன் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். வன்முறையை ஒடுக்கச் சென்ற காவல்துறையினர் மீதும் கல்லெறிந்தனர்.
இதையடுத்துக் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். டிரோன் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று வரை 73 பேரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



