தமிழ்நாடு இவ்வளவு கடன் வாங்கியதே கிடையாது – தமிழிசை சாடல்.!

Advertisements

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு இவ்வளவு கடன் வாங்கியதே கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொருளாதாரத்தில் இரட்டை இலக்கு சாதனை என்று முதலமைச்சர் டூவிட் செய்துள்ளார்.

ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு கொண்டு வந்த அடிப்படை வசதிகளே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, அதிகமாக கடன் வாங்கி அதிகமாக செலவு செய்து உள்ளீர்கள் என்றும் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு இவ்வளவு கடன் வாங்கியதே கிடையாது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக சாமி கும்பிடுகிறார். ஆனால், ஸ்டாலின் மாதிரி இல்லாமல் சாமி கும்பிடும் விஜயை அந்த வகையில் தான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *