அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 25, மற்றும் 26 ஆம் தேதிகளில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதில் 2026 சட்டசபை தேர்தல் குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


