இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்ற கருத்தை மாற்றிக்கொண்ட டிரம்ப்..!

Advertisements

இந்தியா-பாகிஸ்தான் போரை  நான்தான் நிறுத்தினேன் என்று கூறிவந்த  அமெரிக்க அதிபா், தற்போது அந்த கருத்தை மாற்றி உள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் இராணுவ தளபதி முனீா் உடனான சந்திப்பை கெளரவமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பாகிஸ்தான் அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக்க ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக பேச்சுவார்த்தை நடப்பட்டதாக கூறினார். இரு நாட்டுத் தலைவா்களும் புத்திசாலிகள். தலைவா்கள் மட்டுமன்றி அந் நாடுகளின் அதிகாரிகளும் புத்திசாலிகளாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மிகப்பெரிய அணு ஆயுத சக்தியுடைய நாடுகள். அந்த வகையில், சண்டையை நிறுத்த அவா்கள் தீா்மானித்தது அமெரிக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றாா்.

மேலும் போர்  நிறுத்தத்தை இரு நாட்டு தலைவா்கள்தான் தீா்மானித்தனா் என முதல் முறையாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *