Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஆறு மாதங்கள் தான் இருக்கிறது. அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் வருகிற சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய போர்க்களமாக இருக்கும் சூழ்நிலையில் அதிமுகவை ஒருங்கிணைத்தால் மிக எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற கருத்து நிலவுகிறது . இது தொடர்பாக அதிமுகவினரும் ஆங்காங்கே தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஒரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் அவரது பேட்டியும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது . இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்புக்கு மறுக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்ட அதிமுக இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வேரூன்றியது . அதிமுகவை பொறுத்த வரையில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு ஈ. கொசு கூட கிளம்பி விட முடியாது அந்த வகையில் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் .
அதிமுகவை மட்டுமல்ல எதிர்க்கட்சிகளையும் ஜெயலலிதா மிரட்டி வந்தார் என்பதை மறுக்க முடியாது . இந்த சூழ்நிலையில் தான் அவரது மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது . ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகிய முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் கொங்கு நாட்டில் கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டை எனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அவரது ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் நீக்கப்பட்டார் . பல்வேறு சூழ்நிலைகளிலும் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக உறுதியாக இருக்கிறார் .
இந்த நிலையில் மயிலாடுதுறையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ எஸ் மணியன் கட்சியை விட்டு பிரிந்து போனவர்கள் மன்னிப்பு கேட்டால் இது குறித்து பொதுச்செயலாளர் இடம் நாங்கள் பேசுவோம் என ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் .
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவரை கைபேசியில் அழைத்து கண்டித்து இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் அவர்களை ஒருங்கிணைக்க முடியாது கட்சி தலைமை அனுமதி இல்லாமல் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்காதீர்கள் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார் .
இதற்கிடையே திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் எஸ் பி வேலுமணி தங்கமணி போன்ற கட்சி முன்னோடிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருகிறார் . வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை மிக நீண்ட நேரம் நடைபெற்று இருக்கிறது .
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது கருத்தை தெரிவிக்கும் பொழுது அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியையும் கூட்டணியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் நாம் வெளியிட போகும் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கிறார் .
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் பொழுது பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தற்பொழுது மிக பலவீனமாக இருக்கிறது. தந்தை மகன் இருவரும் தனித்தனி கோஷ்டியாக இருக்கிறார்கள். இதில் மாம்பழ சின்னத்தைக் கேட்டு, மருத்துவர் ராமதாஸ் தேர்தல் கமிஷன் இடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். எனவே மாம்பழ சின்னம் யாருக்கு கிடைக்கும் என தெரியாது வட மாவட்டங்களை பொறுத்தவரையில் மாம்பழ சின்னத்திற்கு தான் மவுசு அதிகம் எனவே பாட்டாளி மக்கள் கட்சியை மிகப்பெரிய கூட்டணியாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர் .
அதேசமயம் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் ஆகியோர் தனித்துப் போட்டியிடும் வகையில் அதிமுக ஓட்டுகள் சிதறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. நாம் இதயும் ஒரு பொருட்டாக ஆலோசனை செய்ய வேண்டும். இதுவல்லாமல் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் சசிகலா செங்கோட்டையன் ஆகியோரும் அதிமுகவுக்கு எதிராக செயல்படும் வகையில் நமது கட்சியை பொறுத்தவரையில் அதிமுகவுக்கு சற்று பின்னடைவு இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர் .
இந்த சமயத்தில்தான் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது . அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தனது நிலை குறித்து விளக்கி இருக்கிறார். அவர் பேசும் போது , பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைந்தால் அதிமுக கட்சியை முற்றிலுமாக அழித்துவிடுவார்கள் . சசிகலாவை பொறுத்தவரையில் அதிமுகவை முழுக்க முழுக்க தனது அதிகாரத்துக்கு கொண்டு வந்து ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என ஆசைப்படுகிறார்.
சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கும் பொழுது எனது தலைமையிலான அனைத்து ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டு, அவர் புதிய ஆதரவாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எட்டிப் பிடிக்கத்தான் முயற்சி செய்வார் . இது மட்டும் அல்லாமல் ஓஎஸ் மணியன் சொன்னது போல் சசிகலா மன்னிப்பு கேட்டாலும் அவரை கட்சியில் சேர்க்க முடியாது. அவரை கட்சியில் சேர்க்கும் வகையில் தனக்கு தொகுதி பங்கீட்டில் அதிக இடம் வேண்டும் தனது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என கொடி பிடிப்பார் .
இதே சமயத்தில் டிடிவி தினகரளை பொருத்தவரையில் நாம் மன்னிக்க முடியாத அளவுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் . என்னை அழித்து விடுவேன் என்றெல்லாம் பேசி வருகிறார்.. இது மட்டுமல்லாமல் நமது கட்சிக்கு எதிராக புதிய கூட்டணி சேர்ப்பதில் முன்னெடுத்து நிற்கிறார். அப்படிப்பட்டவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் அவரைக் கட்சியில் சேர்த்தாலும் தனது ஆதரவாளர்களுக்கு தொகுதி பங்கில் அதிக இடங்கள் கேட்பார் .
இதற்கு அடுத்தபடியாக ஓ பன்னீர்செல்வம் முழுக்க முழுக்க திமுக ஆதரவாளராக செயல்படுகிறார். அவருக்கு எவ்வளவோ மரியாதைகள் செய்தோம் ஆனால் கடைசியில் அவர் தனது புத்தியை காட்டிவிட்டார். இதேபோல் செங்கோட்டையனை பொறுத்தவரையில் அவருக்கு கோபிசெட்டிபாளையம் தொகுதியை ஒதுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக புதிதாக குரல் கொடுத்து கிளம்பி இருக்கிறார் . அவர் தனியாக கிளம்பவில்லை .
அதற்கு பின்னால் சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் என எல்லோருமே திரை மறைவில் கைகோர்த்து தான் செயல்படுகிறார்கள் .
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முதல் செங்கோட்டையன் நமக்கு எதிராக மிக வேகமாக செயல்படுகிறார் . அப்படிப்பட்டவரையும் கட்சியில் சேர்க்க முடியாது. இவர்களையெல்லாம் சேர்த்துக்கொணமுடியும் தொகுதி பங்கிட்டை எப்படி செய்ய முடியும் . ஏற்கனவே பாஜகவினர் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறார்கள் .
அதே சமயம் பாட்டாளி மக்கள் கட்சியும் கூடுதல் தொகுதியை கேட்பார்கள் இந்த சூழ்நிலையில் குறைந்தது நாம் 175 தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும் . நீங்கள் சொல்வதற்காக இவர்களை கட்சியில் சேர்த்தால் நான் கட்சியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும் அது மட்டுமல்ல அதிமுக பல துண்டுகளாக சிதறி வருகிற தேர்தலை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஆகிவிடும்
அம்மா வளர்த்து விட்ட இந்த கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெற வேண்டும் . நிச்சயமாக அம்மாவின் ஆசி நமக்கு இருக்கும் வருகிற தேர்தலில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் அதற்கான கூட்டணி ஏற்பாடுகளையும் தேர்தல் திட்டங்களையும் நான் செயல்படுத்தி வருகிறேன்.
என்னுடைய சூழ்நிலையை உங்களிடம் மனம் திறந்து பேசி விட்டேன் இதையும் மீறி அதிமுக ஒருங்கிணைப்பு அவசியம் என்று நீங்கள் சொன்னால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார் .
இதனை தொடர்ந்து , அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் நீங்கள் சொல்வதுதான் சரி உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறோம் தைரியமாக செயல்படுங்கள் என்று கூறி இருக்கிறார்கள் ,
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனிப்பட்ட முறையில் பேசிய பேச்சு மிக விரைவில் வைரலாக இணையதளங்கள் மூலம் பேசப்படும் என தெரிகிறது .
Advertisements




