வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்ததைத் தடுப்பதே நமது ஆகப்பெரும் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தடுப்பதே நமது இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை ஆகும் எனத் தெரிவித்தார். ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையேப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அவர், மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட தமிழக முழுவதும் திமுக கூட்டணி கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த, ஆர்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட வேண்டும் என்றார். தொடர்ந்து, செயலாற்றுவோம் நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.


