எடப்பாடிக்கு எதிரி விஜய்யும் ,சீமானும்தான் பரபரப்பு ரிப்போர்ட்..! 

Advertisements
தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாத காலமாக சுற்றுப்பயணம் செய்து வந்தார் கிட்டத்தட்ட அவர் 175 தொகுதிகளில் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார் . அவர் சென்ற இடமெல்லாம் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து அவரது பேச்சைக் கேட்டு ஆரவாரம் செய்தனர் .
ஒவ்வொரு பகுதிகளிலும் என்னென்ன பிரச்சனை இருக்கிறது அதிமுக வெற்றி பெற்றால் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்கிற ரீதியில் அவர் பேசி வந்தார் . இந்த நிலையில் அவர் சுற்றுப்பயணம் செய்த பகுதிகள் அனைத்திலும் திரைமறைவில் ஒரு சர்வே ஆய்வு நடத்தப்பட்டது .
அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப் பயணத்துக்கு பிறகு அந்த பகுதிகளில் உள்ள மக்கள்  மனநிலை எப்படி இருக்கிறது என்பநு குறித்து ஆய்வு செய்யப்பட்டது . இதற்கிடையே விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தற்பொழுது,  அதிமுகவுடன் கூட்டணி வைக்காததால் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் பின்னணியில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த தகவல்கள் அனைத்தும் அதிமுகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக தெரிகிறது . அதாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவின் ஓட்டுகள் சிதறுகின்றன. அதிமுகவுக்கு வெற்றி பெற சாதகமாக உள்ள வாக்குகள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சியும் தமிழக முன்னேற்ற கழகமும் பிரித்து விடும் என தெரிகிறது .
அதாவது திமுகவை பொருத்தவரையில் அந்த கட்சியினர் தொடர்ந்து திமுகவுக்கு வாக்களிக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியிலும் மு க ஸ்டாலினுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது . பெண்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஒரு வெற்றி திட்டமாக பார்க்கப்படுகிறது.  வருகிற டிசம்பரில் மீதம் உள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதால் பெரும்பாலான பெண்கள் வாக்கு திமுகவுக்கு கிடைக்கும் என தெரிகிறது .
அதே சமயம் அதிமுக ஒருங்கிணைக்கப்படாமல் தகுந்த கூட்டணியும் இல்லாமல் இருப்பதால் வாக்கு வங்கிகள் சிதறும் என தெரிகிறது .
இந்த முறை எப்படியும் மூன்றாவது இடத்தை பெற்று விட வேண்டும் என்ற வகையில் நாம் தமிழர் சீமான் பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார் . கடந்த தேர்தல்களைப் பொறுத்த வரையில் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 1.1% வாக்குகள் தான் பெற்றது. ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு . அதாவது அடுத்த மூன்று ஆண்டுகளில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 3.8 ஆக அதிகரித்தது .
அதாவது மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி இருமடங்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறது . தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 6.7 ஆக உயர்ந்துள்ளதுபல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய வேட்பாளர்களின் நெற்றியை நாம் தமிழர் கட்சி தான்முடிவு செய்திருக்கிறது . இதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 8.4 ஆக உயர்ந்திருக்கிறது .
இது மட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளது . இதே காலகட்டத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது . இதன் மூலம்நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிலிருந்து கிடைத்ததாக தெரிய வந்திருக்கிறது .
இந்த நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிட்டால் மேலும் அதிமுகவின் வாக்கு வங்கியே சிதறும் என தெரிகிறது . நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரையில் இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறார் நடிகர் விஜய்யை பொருத்தமட்டில் அவரும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிட முடிவு செய்து வருகிறார்.
அதுவல்லாமல் வேறு வகையில் கூட்டணி வைத்தாலும் அது அதிமுவுக்குத்தாதான் ஆபத்து என்கிறார்கள் . தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் பணிகளையும் திமுகவினர் மிக வேகமாக செய்து வருவதாகவும் அதிமுகவினர் பின்னடைவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது . எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி புதிதாக ஏதாவது திட்டம் தீட்டினால் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
ஏற்கனவே நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் , அந்த கட்சிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன . இதே போன்று நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகள் பெறலாம் என தெரிகிறது . ஆக மொத்தத்தில் 26 சதவீத வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் கிடைக்கும்பட்சத்தில் மீதமுள்ள 75 சதவீதத்தில்  40% வாக்குகள் திமுகவுக்கும் 35 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கும் கிடைக்கும் என தெரிகிறது .
அந்த வகையில் , அதிமுக திமுக இடையே பலத்த போட்டி இருக்கும் என்றாலும் , மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்ற சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது . திமுக வெற்றி பெறும் தொகுதிகளில் ஒவ்வொரு அதிமுக வேட்பாளரும் கிட்டத்தட்ட 2000 வாக்குகள் முதல் ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவார்கள்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி மக்களை கவரும் வகையில் புதிய கூட்டணி அமைத்து திட்டங்களையும் அறிவித்து தேர்தல் அறிக்கையும் வெற்றிகரமாக வெளியிட்டால் அதிமுக வெல்வதற்கான சூழ்நிலைகளும் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பரபரப்பு செய்தியாகும் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *